லாட்டரி வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
சிதம்பரத்தில் கத்தியை காட்டி மிரட்டி லாட்டரி சீட்டு வாங்காததால் வழிப்பறியில் ஈடுபட்டது அம்பலம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் இளமை ஆக்கினார் கோயில் தெரு, சீனிவாசன் மகன் ஜோதி வயது 48. இவர் புதினா மல்லி வியாபாரம் செய்து வருகிறார் . இந்நிலையில் சிதம்பரம் ரயில்வே மேம்பாலம் கீழே வரும் பொழுது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கிக் கொள். இந்த சீட்டுக்கு கண்டிப்பாக பரிசு விழும் என்று கூறியுள்ளார். இதற்கு ஜோதி மறுக்கவே அவரை அசிங்கமாக திட்டி அவரது சட்டைப் பையில் இருந்த ரூபாய் 200 பறித்துக் கொண்டு கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இது தொடர்பாக சிதம்பரம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு இந்த வழக்கில் தொடர்புடைய சிதம்பரம் அடுத்த காரைக்காட்டு வெள்ளாளர் தெரு சம்மு என்ற நசீர் 56, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவர் மீது சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் ஐந்து லாட்டரி சீட்டு வழக்குகள் உள்ளன.இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல்துறை எஸ் பி இராஜா ராம் பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்யா செந்தில் குமார் ஆணையின் பேரில் ஷம்மு என்ற நசீரை குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.