கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் உதவி கமிஷனர் ஆய்வு
போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்
சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் உதவி கமிஷனர் அஸ்வினி நேற்று ஆய்வு மேற்கொண்டார். போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள், ரவுடி பட்டியல், தேடப்படும் குற்றவாளி பட்டியல், இதர கோப்புகள் மற்றும் கோப்பு வைக்கும் அறை, தளவாட பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்புகளிலும் அவர் குறைகளை கேட்டறிந்தார்.