செங்கல்பட்டு :மண்புழு உரம் உற்பத்தி செய்ய, விவசாயிகளுக்கு அழைப்பு
செங்கல்பட்டு :மண்புழு உரம் உற்பத்தி செய்ய, விவசாயிகளுக்கு அழைப்பு
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி அறிக்கை: முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், மண்புழு உரம் தயாரித்து மண்வளத்தை மேம்படுத்தும் வகையில், விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கப்பட உள்ளன.இத்திட்டத்தில், ஒரு விவசாயிக்கு 2 மண்புழு உரப்படுக்கைகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள, கடந்த இரு ஆண்டில் இதே சலுகை பெறாத அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதியுடையவர்கள். நேரடியாக உழவர் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம். விருப்பம் உள்ள விவசாயிகள் மண்புழு உரப்படுக்கைகளை, தங்கள் பகுதியில் உள்ள, வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக பெற்று பயன் பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.