திருவக்கரை கல்குவாரியில் கொத்தனார் கொலை வழக்கில், மேலும் ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்.
கொத்தனார் கொலை வழக்கில், மேலும் ஒருவர் கைது
விழுப்புரம் மாவட்டம்,திருவக்கரை கல்குவாரியில் வீசப்பட்ட தலையில்லாத ஆண் சடலத்தை வானூர் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். திருவெண்ணைநல்லுார் அடுத்த சரவணப்பாக்கத்தை சேர்ந்த கொத்தனார் ராஜதுரை, 32; என்பவரை, முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் கொலை செய்து, உடலை கல்குவாரியில் வீசியது தெரிய வந்தது.இவ்வழக்கில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தலைமறைவான சரவணப்பாக்கத்தை சேர்ந்த தங்கபாண்டி, வளவனுார் டி.எஸ்., நகரை சேர்ந்த சரவணன் மகன் புருஷோத்தமன், 25; ஆகிய இருவரை தேடி வந்தனர்.விழுப்புரத்தில் பதுங்கியிருந்த புருஷோத்தமனை போலீசார் நேற்று கைது செய்தனர். தங்கபாண்டியை தேடி வருகின்றனர்.