மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

குறைதீர்க்கும் கூட்டம்

Update: 2024-12-25 04:07 GMT
திருநெல்வேலி மாநகராட்சியின் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (டிசம்பர் 24) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 20வது வார்டு கவுன்சிலர் மன்சூர் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் ஆதம் நகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் ஓடை தரை மட்டத்திலிருந்து உயரமாக உள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

Similar News