கோவிலுரில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு
கோவிலூர் புனித சவேரியார் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடு
உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று கிறிஸ்மஸ் பண்டிகையாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது. இன்று டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, உதவி பங்குத்தந்தை பெனடிக் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட குடிலில் தங்களது பிரார்த்தனைகளை செய்தனர்.