மயிலம் அருகே மது பாட்டில் கடத்தியவர் கைது

போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

Update: 2024-12-25 04:01 GMT
விழுப்புரம் மாவட்டம்,மயிலம் அடுத்த கோபாலபுரம் கிராம பஸ் ஸ்டாப்பிங் அருகே மயிலம் சப் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக ஸ்கூட்டியில் வந்த வாலிபரை மடக்கி சோதனை செய்தனர்.விசாரித்ததில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 65 மது பாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.மேலும் அவரிடம் விசாரித்ததில் மது பாட்டில் கடத்தியவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த திருவந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த காந்தி ராஜ் மகன் மோகன்துளசிராமன், 29; என்பது தெரிய வந்தது.பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News