ஏழை மாணவிக்கு விமான பயணம்
குளக்காரன்பட்டியைச் சேர்ந்த ஏழை மாணவிக்கு விமான பயண சீட்டு வழங்கிய காவல்துறை சார்பு ஆய்வாளர் ஏழை மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விமான பயணம்
திண்டுக்கல் கிழக்கு குளக்காரன்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யாவுக்கு சாணார்பட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் முதல் விமான பயணத்திற்கான பயணச்சீட்டை வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம் உறவின் சந்திப்பு தமிழக இளைஞர் பாராளுமன்றம் சார்பில் பல்வேறு தன்னார்வ சமூகப் பணிகள் ஆற்றப்பட்டு வருகிறது. சமூக ஆர்வலர் பால்தாமஸ் ஒருங்கிணைப்பில் தன்னார்வலர்கள் ஒன்று கூடி இவ்வமைப்பு சார்பில் ஏழை மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களின் எட்டாக்கனியாக இருக்கும் விமானத்தில் பயணிக்கும் கனவை நனவாக்கும் வகையில், இந்த ஆண்டு இருவரை தேர்வு செய்து, அவர்களுக்கான விமான பயண செலவுகளை ஏற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக பெங்களூரு விமான பயணம் மேற்கொள்ள உள்ளனர். பயணச்சீட்டைப் பெற்றுக் கொண்ட மாணவி திவ்யா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் . இந்நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் பூபதி, சுகாதார ஆய்வாளர் முனியப்பன், வழக்கறிஞர் ரவிசெல்வன் , முன்னாள் ராணுவ வீரர் மாறவர்மன் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடன் இருந்தனர்.