குடிப்பதற்கு பணம் கேட்டு பெற்றோரை மிரட்டிய மகன் கைது

போலீசார் நடவடிக்கை

Update: 2024-12-24 01:29 GMT
சேலம் அருகே உள்ள சின்னத்திருப்பதி அபிராமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி வனஜா. இவர்களின் 2-வது மகன் வருண் (வயது 35). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் இவருடைய மனைவி, குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் வருண் குடிப்பதற்கு பணம் கேட்டு பெற்றோரை திட்டி, அடித்து மிரட்டி தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய தாயார் வனஜா கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ் வழக்குப்பதிவு செய்து வருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News