சங்கரன்கோவிலில் கணவரை கத்தியால் குத்தி மனைவி கைது

கணவரை கத்தியால் குத்தி மனைவி கைது

Update: 2024-12-24 02:10 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சேர்ந்த கிலாடி விநாயகர்கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி மாரியப்பன் (36). இவரது மனைவி கோகிலாவுக்கும் அடிக்கடி குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மாரியப்பன் வீட்டிற்கு வந்து மனைவி கோகிலாயிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த கோகிலா தான் கையில் வைத்திருந்த கத்தியால் கணவரை மூன்று இடங்களில் குத்தினார். இதில் காயமடைந்த மாரியப்பன் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News