மத்திய அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் காங்கிரஸ் எம்பி வலியுறுத்தல்

பிரதமா் மோடி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சிவகங்கை காங்கிரஸ் எம்பி காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

Update: 2024-12-24 03:12 GMT
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மீது பிரதமா் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா் பதவி விலக வேண்டும். காங்கிரஸ் கட்சி இது குறித்து தொடா் போராட்டங்களை நடத்தும். ஆளுநா் ஆா்.என். ரவியின் அத்துமீறல்கள் இன்னும் அடங்கவில்லை. அரசியல் சாசனத்தின் எல்லையை அவா் மீறிக்கொண்டே இருக்கிறாா். இங்கு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஓா் அரசு உள்ளது. அரசாங்கத்தைச அவா் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதால், அவருக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடா்கிறது என்று தெரிவித்தார்

Similar News