முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் சின்னச்சாமி, மாவட்டச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையிலும், அமைப்பின் மாநிலத் தலைவர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்புச் செயலாளராக செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணித் தலைவியாக நாட்டரசன்கோட்டை எஸ்ஆர்.எம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அனிதா, செயலாளராக திருப்புவனம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் லலிதா, செய்தித் தொடர்பாளராக ஆசைமணி, தணிக்கையாளராக உதயகுமார், தலைமையிடச் செயலாளராக திருமுருகன், திருப்பத்தூர் கல்வி மாவட்டத் தலைவராக மாயக்கண்ணன், தேவகோட்டை கல்வி மாவட்டத் தலைவராக ஸ்டீபன், ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர் அதனைதொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை பெரிதும் பாதிக்கும் சிபிஎஸ் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும், அறிஞர் அண்ணா டாக்டர் கலைஞர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரால் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை வழங்க மறுப்பது தமிழக அரசு ஆசிரியர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். எனவே ஊக்க ஊதிய உயர்வு நிலை தொடர்ந்து பழைய முறைப்படி வழங்கிட வேண்டும், கொரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடியால் நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் தற்போது நிதி நிலைமை சீராகி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வரும் பொழுது அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சரண்டர் வழங்குவதில் மட்டும் நிதிநிலை சரியில்லை என்று சொல்லி நம்பிக்கையோடு வாக்களித்த அரசு ஊழியர், ஆசிரியர்களை வஞ்சிக்கிற செயலை நிறுத்த வேண்டும்... இதனை எமது அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. 2021 முதல் சரண்டர் ஒப்படைத்து பணப் பலன் பெற உரிய ஆணை வழங்கிட வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் தொடர்பாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையிலும் கல்வித்துறை உயர் அலுவலர்கள் எந்த வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் தன்னிச்சையாக சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர் உயர் கல்வி ஊக்க ஊதியம் பெற்றுவருபவர்களுக்கு தேர்வுநிலை வழங்க மறுப்பதும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக தொடர்ந்து மாவட்டக் கல்வி அலுவலகம் பல்வேறு இடையூறுகளை செய்து உத்தரவு பிறப்பிப்பதை நிறுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கான பணப்பலன்களை பெற்று வழங்க ஒரு சில தலைமை ஆசிரியர்கள் மறுத்து வருகின்றனர் இது சார்ந்து முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதை வன்மையாக கண்டிக்கிறோம், ஆசிரியர் நலன் சார்ந்து குறைதீர் கூட்டங்கள் நடத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கல்வித் துறை அறிவுறுத்திய போதும் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக நடந்து கொள்வது தொடர்ந்தால் போராட்டம் நடத்த வேண்டியது அவசியமாகிறது, அரையாண்டு தேர்வு ,முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகளை பள்ளி வேலை நேரத்தில் தொடங்கி முடிக்க வேண்டும் மாலை 5 மணி வரை தேர்வு என்ற அட்டவணை உடனடியாக மாற்றி அமைத்து காலை ஒன்பது முப்பது முதல் மாலை 4:30-க்குள் அனைத்து கல்வி சார்ந்த பணிகளையும் முடிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இக்கூட்டத்தில் ஏராளமான முதுகலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் இறுதியாக கல்வி மாவட்டத் தலைவர் ஸ்டீபன் நன்றி கூறினார்.