அரசு பேருந்து மோதி பள்ளி மாணவி பலி இருவர் படுகாயம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மாணவர்களில் ஒரு மாணவி உயிரிழப்பு இரண்டு பேர் படுகாயம்;
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணி விக்டர்ராஜ் என்பவரின் மகள்கள் இரட்டை சகோதரிகளான பியூலா ஹான்சி(14), பியூலா நான்சி(14) ஆகிய இருவரும் 10-ஆம் வகுப்பும், மகன் அந்தோணி விக்ரந்த் ராஜ்(12) 7-ஆம் வகுப்பும் படித்து வருகிறார். மாணவிகள் இருவரும் கால்பந்து விளையாட்டு வீரர்கள். அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட போட்டியில் மாணவிகள் பங்குபெற உள்ள நிலையில் தினந்தோறும் தங்கள் வீட்டிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுச்சேரி விளையாட்டு மைதானத்திற்கு சென்று கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை வீட்டிலிருந்து மாணவிகள் இருவரும் தம்பியுடன் காட்டுச்சேரி விளையாட்டு மைதானத்திற்கு சென்றனர் இருசக்கர வாகனத்தை அந்தோனி விக்ரந்த்ராஜ் ஒட்டி சென்றுள்ளார். சங்கரன்பந்தலில் இருந்து பொறையார் செல்லும் சாலையில் சென்றபோது காராம்பள்ளம் அருகே திருப்பத்தில் எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பியூலா நான்சி தலை மற்றும் நெற்றியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த அந்தோணி விக்ராந்த் ராஜிக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு தஞ்சை மறுத்துக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ள. பியூலா ஹான்சிக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டது அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து பொறையார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.