புதுகை மாவட்டம் கொடும்பாளூரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (55). (டிச.24 ) காலை 7 மணிக்கு தனது பைக்கில் விராலிமலை சென்றபோது கவசனூர் கிளைச்சாலை செங்கல்பட்டை சேர்ந்த ராமர் ஓட்டி வந்த டஸ்டின் கார் பின்பக்கமாக மோதியதில் பலத்த காயமடைந்த பாண்டியன் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.