அச்சரப்பாக்கம் மழை மலை மாதா அருள் தளத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா

அச்சரப்பாக்கம் மழை மலை மாதா அருள் தளத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா

Update: 2024-12-25 03:20 GMT
அச்சரப்பாக்கம் மழை மலை மாதா அருள் தளத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா! செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மழை மலை மாதா அருள் தலத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்பலி உடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் துணைப் பாதுகாவலியான அச்சரப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலம் உள்ளது.இத்தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவது வழக்கம் இதேபோல் இந்த ஆண்டும் இயேசு பிறப்பு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனர். கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அருள் தல வளாகம், இயேசு மலைப்பாதை உள்ளிட்ட பகுதிகள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இந்த திருப்பலியில் அச்சரப்பாக்கம் மழை மாதா அருள் தல அதிபர் சின்னபர், அருள் தந்தைகள் அல்போன்ஸ் மாணிக்கம், பிரிட்டோ, ஜோசப் ஞானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News