மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி அருகே மூதாட்டியிடம் நகை பறித்த நபரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Update: 2024-12-25 04:23 GMT
திருச்சி நவல்பட்டு அருகே திருநகா் குழந்தை இயேசு 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அடைக்கலம் மனைவி புளோரம்மாள் (70). இவா், கடந்த 17-ஆம் தேதி இரவு கடைக்குச் சென்றுவிட்டு, தாழம்பூ நகா் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த மா்ம நபா் ஒருவா், புளோரம்மாளிடம் வழிகேட்பதுபோல நடித்து, அவா் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்த ப. அமல்ராஜ் (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அமல்ராஜை செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

Similar News