ஓஎன்ஜிசி நிர்வாகத்தினர் தந்தை பெரியார் நினைவு ஓபிசி கல்வி உதவி

தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு ஓஎன்ஜிசியின் ஓபிசி தொழிலாளர்களின் நிதியில் மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்;

Update: 2024-12-25 12:04 GMT
. தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள ஓஎன்ஜிசி அலுவலகத்தில் ஓஎன்ஜிசி பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் நல சங்கத்தின் சார்பில் ஓபிசி தொழிலாளர்கள் நிதியில் இருந்து மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு 90 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலை, 50 மாணவர்களுக்கு புத்தகப்பை, தரைக்கடை வியாபாரிகள் 15 பேருக்கு குடை மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ, சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், ஓஎன்ஜிசி நிறுவன செயல் இயக்குனர் உதய் பஸ்வான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News