குடிநீர் அடிகுழாயை ஆக்கிரமித்து வீடு கிராமத்தினருடன் ஊ.தலைவர் தர்ணா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் உடன் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு;

Update: 2024-12-25 12:21 GMT
காஞ்சிபுரம் தாலுகா, காரை போஸ்ட், செம்பரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர், கலெக்டர் வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கிராமத்தைச் சேர்ந்த 82 பேருக்கு, வீட்டுமனை பட்டா அரசு சார்பில் வழங்கப்பட்டது. அதில், 54 பேருக்கு பட்டா வழங்காமல் விடுபட்டுள்ளது. எனவே, விடுபட்ட நபர்களுக்கு பட்டா வழங்க, 8 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இது தொடர்பாக, தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, கலெக்டர் வளாகத்தில் திடீரென பலரும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News