ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை அடித்து நொறுக்கிய அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்திற்கு வருகை தந்த எம்பி சுதா செய்தியாளர்களிடம் இந்துக்கள் நாடு என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை அடித்து நொருக்கியவர் அம்பேத்கார். அவரை பற்றி இழிவாகபேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்

Update: 2024-12-26 03:05 GMT
மயிலாடுதுறையில் காங். எம்.பி.சுதா செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்துக்கள் நாடு என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை அடித்து நொருக்கியவர் அம்பேத்கார். அவரை பற்றி இழிவாகபேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவியை ராஜினாமாக செய்ய வேண்டும் என்று எம்.பிக்கள் லோக்சபாவில் போராட்டம் நடத்தினோம். விலைவாசி உயர்வு கடலை மிட்டாய், பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் உட்பட அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதித்து இரண்டு தொழில்அதிபர்களை வாழவைத்துகொண்டு இருக்கிறது மத்திய அரசு. இந்தியாவில் மனிதர்கள் காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை வரிசெலுத்தினால் மட்டுமே வாழமுடியும் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த வளத்தை அனுபவிக்கும் அதானியை பிரதமர் தாங்கிபிடித்துகொண்டு இருக்கிறார். டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட மண்டலம் என்ற கேள்வியை எழுப்பியபோது டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட மாண்டலம் என்ற எந்தவித தகவலும் இல்லை என்று கூறியது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவர்னர் அனுமதிபெற்று அரசாணை வெளியிடப்பட்டதாக அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் எங்களுக்கு எந்த ஆணையும் வரவில்லை என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. டெல்டா மாவட்டம் விவசாய புண்ணிய பூமி. இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு உணவளிக்கும் இந்த மண்ணை காப்பாற்ற மாநில அரசு உதவியுடன் போராடுவோம். காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பிரச்னைகளை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். தமிழக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்துள்ளார். மத்திய அரசு ஆயில்நிறுவனங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை டெல்டாவை பாதுகாப்பதற்கு கொடுக்க வேண்டும். உள்துறை அமைச்சர் 27ம் தேதி சென்னை வருகைதருகிறார். அம்பேத்காரை விமர்சித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக காங். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அதனடிப்படையில் தமிழக மண்ணை தொட்டாலே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் காங். கட்சி சார்பில் கருப்புகொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Similar News