பைக் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: ரேஷன் கடை ஊழியர் பலி!
நாசரேத் அருகே பைக் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ரேஷன் கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மாதவனத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் அமல்ராஜ் (47). இவர் நாசரேத்தில் உள்ள ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பைக்கில் சாத்தான்குளத்திலிருந்து நாசரேத் நோக்கி சென்று கொண்டிருந்தார். டிகேசி நகர் அருகே வரும்போது சாத்தான்குளத்திலிருந்து சென்னைக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அமல்ராஜ் நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகராஜ் வழக்குப் பதிந்து ஆம்னி பேருந்து ஓட்டுநர் தர்மபுரியை சேர்ந்த மாதேஸ் குமார் மகன் பிரேம்குமார் (21) என்பவரை கைது செய்தார். மேலும் ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.