ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம், புது விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (79). இவரது கணவர் விஸ்வநாதன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இதையடுத்து, வள்ளியம்மாள் தனது மகன் சென்னியப்பனுடன் வசித்து வந்தார். வள்ளியம்மாளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது வள்ளியம்மாள் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.