சங்கரன்கோவிலில் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

Update: 2024-12-26 06:01 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பூக்கள் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் ஒரு மல்லிகை ரூ.1500 முதல் ரூ.1750 வரை விற்பனையாகிறது. கனகாம்பரம் ரூ.800க்கும், பிச்சிப்பூ ரூ.600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்தபோதும் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News