மாற்றுத்திறனாளிகளுக்கு கிறிஸ்மஸ் உதவி வழங்கும் விழா!

நாசரேத் அருகே திருமறையூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு கிறிஸ்மஸ் உதவி வழங்கும் விழா நடைபெற்றது

Update: 2024-12-26 06:08 GMT
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே திருமறையூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு கிறிஸ்மஸ் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமறையூர் மறுரூப ஆலயத்தின் சேகர குருவானவர் ஜான் சாமுவேல் ஜெபம் செய்து உதவிகளை ஆரம்பித்து வைத்தார். உதவி வழங்கும் விழாவில் நாசரேத் ஸ்டான்லி, ஜெஃப்ரி அகஸ்டஸ் ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்கள். அனைவருக்கும் ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள் ஜெயபால், ஆசீர் துரைராஜ் ஜெயசிங், ரூபன் காலிசன், ஜோயல் கிருபாகரன், ஜெபசிங், டேனியல், ஆலய பணியாளர் ஆபிரகாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர், இதில் நாசரேத் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 60 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உதவிகளை பெற்றார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் செய்திருந்தார்.

Similar News