நகை பணத்தை பறிப்பதற்காக மூன்று பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி கரூரில் கைது.
நகை பணத்தை பறிப்பதற்காக மூன்று பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி கரூரில் கைது.
நகை பணத்தை பறிப்பதற்காக மூன்று பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி கரூரில் கைது. கரூர் மாவட்டம், புஞ்சை காளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபருக்கும், கோவை மாவட்டம், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரேணுகா வயது 36 என்ற பெண்ணுக்கும் கடந்த 12ஆம் தேதி கரூரை அடுத்த மண்மங்கலம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது. ரேணுகா ஏற்கனவே புதுக்கோட்டை மற்றும் கோவையைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து உள்ளார். அதனை மறைத்து மூன்றாவதாக இந்த வாலிபரை திருமணம் செய்தது அவருக்கு தெரியவந்தது. இது குறித்து ரேணுகாவிடம் வாலிபர் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரேணுகா அந்த வாலிபரை மிரட்டி ரூபாய் 20 லட்சம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை கேட்டுள்ளார். இது குறித்து அந்த வாலிபர் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர் கரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர். இதனிடைய ரேணுகா தப்பி செல்ல முயன்றதை அறிந்த மகளிர் காவல்துறையினர், ரேணுகாவை கைது செய்தனர். மேலும், ரேணுகாவிடம் மேற்கொண்ட விசாரணையில், பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதும், திருமணம் என்ற பெயரில் ஆண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், ரேணுகாவிற்கு உடந்தையாக இருந்த கோவை தேவகோட்டையைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.