காஞ்சிபுரத்தில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரத்தில் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை, துவக்கி வைத்தார்

Update: 2024-12-26 06:11 GMT
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில், கல்லுாரியைச் சேர்ந்த 280 மாணவ - மாணவியர் பங்கேற்று, போதை பொருள் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியப்படி ஊர்வலமாக சென்றனர். இந்த பேரணி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து, பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் உதவி ஆணையர் (கலால்) திருவாசகம், அரசு அலுவலர்கள் மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

Similar News