முதியவர் தற்கொலை

அம்மாபேட்டை அருகே பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

Update: 2024-12-26 06:38 GMT
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊஞ்சப்பாளையம், அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சின்னகண்ணு (70). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக நோய் பாதிப்பு அதிகரித்து வந்துள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளான சின்னகண்ணு சம்பவத்தன்று எறும்பு பவுடரை நீரில் கரைத்து குடித்து விட்டார். இதனால், அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மகன் மாதேஸ்வரன் (50) உடனடியாக அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சையில் இருந்த சின்னகண்ணு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.இதுகுறித்து, அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News