புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் எம்எல்ஏ
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் இன்று (டிச.26) சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூர் ஒன்றியம் ஊர்சேரி முதல் முடுவார்பட்டி தார்சாலையை மேம்படுத்திடும் பணிக்கு நடைபெற்ற பூமி பூஜையை துவக்கி வைத்தார். உடன் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.