குருபரப்பள்ளி: கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

குருபரப்பள்ளி: கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

Update: 2024-12-26 08:53 GMT
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று இருந்த லாரியை சோதனை செய்த போது 4 கிரானைட் கற்கள் கடத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து சரவணன் குருபரப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து டிரைவர், மற்றும் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News