கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா
100 கட்சி கொடிகள் ஏற்றும் நிகழ்ச்சி
நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் அருகில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 100 கட்சி கொடிகள் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை வசித்தார். கட்சியின் மாவட்ட பொருளாளர் பாபுஜி முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் கட்சியின் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில், ஒன்றிய செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார். அதேபோல், திருமருகல் ஒன்றியம் நடுக்கடை, சியாத்தமங்கை, துறையூர், திருப்பயத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் கட்சி கொடியேற்றி வைத்தார்.