இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்

திருச்சியிலிருந்து இலங்கைக்கு உரிய அனுமதி இன்றி கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டு பணத்தாள்களை சுங்கத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Update: 2024-12-26 10:45 GMT
திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கன் விமானத்தில் செல்ல இருந்த பயணி ஒருவா் உரிய அனுமதியின்றி 8000 ஆஸ்திரேலிய டாலா்களை மறைத்து கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை சுங்கத்துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா். அப் பணத்தின் மதிப்பு ரூ. 4. 36 லட்சமாகும்.

Similar News