நவோதயா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்.

நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில்கிருஸ்துமஸ் விழா கொண்டாட்டம். நாமக்கல் கீரம்பூரில் உள்ள தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் இன்று காலை 10 மணியளவில் கிருஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-12-26 10:45 GMT
ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர மாணவியர்கள் கிருஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சக மாணவ‌ மாணவியர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஆடிப்பாடி மகிழ்வித்தனர். பள்ளி வளாகத்தில் குடில் அமைத்து ஏசுவின் பிறப்பை தத்துருபமாக வடிவமைத்திருந்தனர். “பள்ளியின் பொருளாளர் கா. தேனருவி நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார் அவர் பேசுகையில் மாணவர்கள் அனைத்து மதங்களையும் போற்றும் பண்புகளை வளர்ந்துக்கொள்ள வேண்டும் உலகில் உள்ள எல்லா மதங்களும் அன்பு கருனை இரக்கம். போன்ற நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளவே மதங்கள் தோன்றியுள்ளது என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டு அனைத்து உயிர்களிடத்தும் கருணை காட்ட வேண்டும்ரூபவ் எல்லோரிடத்திலும் அன்பாக பழகவேண்டும் மனித நேயத்தோடு வாழ வேண்டும்ரூபவ் பெற்றோர்களையும்ரூபவ் ஆசிரியர்களையும் மதிக்கவேண்டும்ரூபவ் என்று கூறி அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறினார்.” பள்ளியின் முதல்வர் ஆண்டனி ராஜ் நிகழ்ச்சியை சிறப்பா ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறினார். இனிப்புகளை பரிமாறிக்கொண்டு நிகழ்ச்சியை அனைவரும் கொண்டாடினர்.

Similar News