குமரி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை கோவில்களில் முழு நேர ஊழியர்களாக பூசாரி, மேல்சாந்தி, கடைநிலை ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு ஆணைப்படி முழு நேர சம்பளம் வழங்கிடாமல், சொற்ப சம்பளம் வழங்கி வருகிறது. இது தொடர்பாக அரசு ஆணையிட்டும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், முழுநேர நிரந்தர பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கிட ரூபாய் 13 கோடி கூடுதல் மானியம் அனுமதித்தும் அதை இன்னும் வழங்காமல் குமரிமாவட்ட இந்து அறநிலையத்துறை காலம் தாழ்த்தி வருகிறது. இதை வழங்காத திருக்கோவில்கள் நிர்வாகத்தை கண்டித்தும், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகம் முன்பு இன்று (26-ம் தேதி).குமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்கம் சார்பில் கோவில் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.