திறனாய்வு தேர்வில்

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

Update: 2024-12-26 10:54 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா ஜேனட் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் செந்தில் வரவேற்றார். நிகழ்ச்சியில், திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் சுந்தரராஜன், மற்றும் டி.எஸ்.பாலு, இ.கே.ராம், பாபு, வீரமணிகண்டன்,ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் செந்தில்வடிவேலன், பள்ளி ஆசிரியர்கள் பாஸ்கர், அசோக்குமார் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News