ஆற்காடு பேருந்து நிலையத்தில் சூழ்ந்து நிற்கும் மழை நீர்!

பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழை நீர் -அகற்ற மக்கள் கோரிக்கை

Update: 2024-12-26 11:11 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சுற்று பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலான மழை பெய்து வந்தது. மேலும் ஆற்காடு பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் ஆற்காடு பேருந்து நிலையத்தில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ,பயணிகள் , அவதிக்குள்ளாகினர்.மேலும் விரைந்து மழை நீரை அகற்ற மக்கள் கோரிக்கை.

Similar News