அரசு தொகுப்பு வீடு கேட்டு பி.டி.ஓ அலுவலகம் முற்றுகை
அரசு தொகுப்பு வீடு கேட்டு பி.டி.ஓ அலுவலகம் முற்றுகை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெமிலி அடுத்த துறையூர் பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் பல ஆண்டுகளாக அரசு தொகுப்பு வீடு கோரி அனைத்து துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை அவருக்கு தொகுப்பு வீடு வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரத்தில் கைக்குழந்தையுடன் இன்று தனது குடும்பத்துடன் சேர்ந்து நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கலைந்து சென்றார்.