பழைய குற்றாலத்தில் சீரமைப்பு பணிகள் தாமதம்

குற்றாலத்தில் சீரமைப்பு பணிகள் தாமதம்

Update: 2024-12-27 10:08 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பழைய குற்றால அருவியில், வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட சேதங்கள் 16 நாள் கடந்தும் இதுவரை சரி செய்யப்படாமல் இருப்பதால் அப்பகுதியில் குளிக்க இன்னும் தடை தொடர்கிறது. இவற்றை வனத்துறை சரி செய்வதா பொதுத்துறை சரி செய்வதா என்ற குழப்பம் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனே சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News