மண்ணச்சநல்லூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை

மாணவர் விடுதி சமையலர் கைது

Update: 2024-12-27 12:54 GMT
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேல சீதேவி மங்கலத்தை சேர்ந்தவர் துரைராஜ். திருச்சி கிராப்பட்டியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் சமயலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் மேலசீதேவி மங்கலத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் மேலசீதேவி மங்கலத்தில் சோதனை நடத்தினர். அப்போது துரைராஜ் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 30 மது பாட்டில்களையும், ரூபாய் 1200 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு அவரை கைது செய்தனர்.

Similar News