கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக அரசையும், தொழிலாளர் நலத்துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலசந்திரபோஸ், மாநில குழு உறுப்பினர் புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், வேஷ்டி, சேலை, பொங்கல் தொகுப்புடன் ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும். வீடு கட்டும் மானியத் திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் உடனடியாக நிதி வழங்க வேண்டும். பென்ஷன் ரூ 3 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும் கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதம் மாதம் நடத்த வேண்டும். கட்டுமான பொருட்களின் விலையை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோசம் எழுப்பினர்.