போளூரில் சிறந்த குடில்களை தேர்வு செய்யும் நிகழ்வு.
வீடுகளுக்கு நேரடியாக சென்று குடில்களை பார்வையிட்டு தேர்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம் அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் ஏசு கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தும் வகையில் குடில் போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்த அழகிய குடில்களை தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த நாளை ஆண்டுதோறும் டிச. 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கிறிஸ்தவா்கள் கொண்டாடி வருகின்றனா். அந்த வகையில், நிகழாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது இதற்காக ஒரு மாதத்துக்கு முன்பே, கிறிஸ்தவா்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திர வடிவிலான விளக்குகளையும், இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததைக் குறிக்கும் வகையிலான குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களை அமைத்து அதில் வண்ண விளக்குகளையும் ஒளிரவைத்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடினர் இந்நிலையில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம் அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் ஏசு கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தும் வகையில் குடில் போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் தயாரித்த அழகிய குடில்களை அருட்பணி விக்டர், அருட்பணி அகிலன் மற்றும் பங்கு பேரவை செயலர் திரு சுரேஷ் பாபு அவர்கள் நடுவர்களாக கலந்து கொண்டு சிறந்த முறையில் தயார் செய்த குடில்களை தேர்வு செய்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த முதல் மூன்று குடில்களுக்கு வரும் புத்தாண்டு அன்று பரிசுகள் வழங்கப்படும் என பங்குத்தந்தை அருட்பணி சகாய பிரான்சிஸ் பிண்டோ அவர்கள் தெரிவித்தார். உடன் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.