குன்றத்தூரில் கன்டெய்னரில் தீக்கிரையான 'டிஷ்யூ பேப்பர்'
முகலிவாக்கத்தை கடந்தபோது மின் கம்பி உரசி, கன்டெய்னர் லாரியில் தீப்பொறி ஏற்பட்டது
ஹரியானா மாநிலத்தில் இருந்து, சென்னை முகலிவாக்கம் பகுதியில் உள்ள கிடங்கிற்கு, 'டிஷ்யூ பேப்பர்' பண்டல்களை ஏற்றி, நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை கண்ணையா, 30, என்பவர் ஓட்டி வந்தார்.மதனந்தபுரம் - -முகலிவாக்கம் சாலையில், முகலிவாக்கத்தை கடந்தபோது மின் கம்பி உரசி, கன்டெய்னர் லாரியில் தீப்பொறி ஏற்பட்டது. இதில், உள்ளே இருந்த டிஷ்யூ பேப்பர்கள் எரிய துவங்கின. விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். இந்த விபத்தில், லாரியில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிஷ்யூ பேப்பர்கள் நாசமாயின. மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.