திருப்பத்தூர் அருகே இருவர் தீகுளிக்க முயற்சி
திருப்பத்தூர் அருகே பட்டா வழங்க மறுத்த கிராம நிருவாக அலுவலரை கண்டித்து தீ குளிக்க முயற்சி
திருப்பத்தூர் மாவட்டம் புத்தாகரம் விஏஓ அலுவலகம் முன்பு பட்டா கேட்டு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த நபர்களால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கல்நார்ச்சாம்பட்டி பள்ளக்கொல்லி பகுதியை சேர்ந்த சிங்காரம், வேட்டப்பட்டு பகுதியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோருக்கு சொந்தமான 91சென்ட் இடத்திற்கு பட்டா வழங்க கிராம நிருவாக அலுவலர் மறுத்ததால் புத்தாகரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு சிங்காரம், மாரியப்பன் ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர் இச்சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.