விருத்தாசலத்தில் நடைபெற்று வரும் நான்கு வழி நெடுஞ்சாலை பணிகளை முதன்மை இயக்குனர் ஆய்வு

பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு;

Update: 2024-12-28 17:24 GMT
தமிழக முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விருத்தாசலம் பொன்னேரி - சித்தலூர் இடையே உள்ள புறவழிச் சாலை நெடுஞ்சாலையில் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.350 கிலோமீட்டர் நீளத்திற்கு இரு வழி தடம் சாலையை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள் விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடந்து வருகிறது. மேலும் அதன் ஒரு பகுதியாக மணிமுத்தாற்றின் குறுக்கே மேம்பால பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன்(சென்னை) நேற்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையின் தரம் மற்றும் வடிவியல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன். பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்புத்துறை (விழுப்புரம்) கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், கட்டிடம் மற்றும் பராமரிப்பு துறை விருத்தாசலம் கோட்ட பொறியாளர் அய்யாதுரை, கோட்ட பொறியாளர்(தர கட்டுப்பாடு விழுப்புரம்) அம்பிகா, கோட்ட பொறியாளர்(சாலை பாதுகாப்பு) ஸ்ரீகாந்த் விழுப்புரம் மற்றும் அனைத்து உதவிக்கோட்ட பொறியாளர்கள் மற்றும் அனைத்து உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறையினர் பலர் உடன் இருந்தனர்.

Similar News