திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் சவகாசமாக சுற்றி திரியும் தெரு நாய்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் சவகாசமாக சுற்றி திரியும் தெரு நாய்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் சவகாசமாக சுற்றி திரியும் தெரு நாய் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் அமைந்துள்ளது இது திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைமை மருத்துவ மனையாகவும் விளங்கி வருகிறது மேலும் தற்போது 53 கோடி அளவிலான புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் இந்த அரசு மருத்துவமனையே நம்பி உள்ளனர் மேலும் ஒரு நாளைக்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது இதில் உள்ள ஆண்கள் உள் நோயாளிகள் பிரிவில் தெரு நாய் ஒன்று சககாசமாக சுற்றி திரியும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த நாய் ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் சுற்றி திரியும் போது அதனை நோயாளிகளே எழுந்து துறத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இதனை அரசு மருத்துவமனையில் உள்ள காவலாளிகள் முறையாக கண்காணித்து இதுபோல் சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது..