பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை
திருச்சி பாலக்கரையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் குமாா் மகள் புவனேஸ்வரி (14). இவா், பாலக்கரை இருதயபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது தாயும், தந்தையும் பிரிந்து வாழ்கின்றனா். இருவருக்கும் சொத்து தகராறும் இருந்துள்ளது. இதனால் மனஅழுத்தத்தில் இருந்த புவனேஸ்வரி டிச. 21-ஆம் தேதி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். இவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.