பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் பெண் உயிரிழப்பு ரமணா பட பாணியில் மருத்துவம் பார்த்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு சாலை மறியல் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பு.
ஜெயங்கொண்டத்தில் பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் என் உயிரிழந்த நிலையில் சமனாபட பாணியில் மருத்துவம் பார்த்ததாகவும் மருத்துவரை கைது செய்ய கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர், டிச.29- ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில் பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி - பெண்ணின் உயிரிழப்பிற்கு காரணமான அரசு மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் பொதுமக்கள் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொண்டாயிருப்பு காலனி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் இவரது மனைவி சங்கீதா (24) இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் 3 வயதில் ஒரு மகன் உள்ளார் இந்நிலையில் இரண்டாவது முறையாக சங்கீதா கருத்தரித்த நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரசவத்திற்காக கடந்த 26ம் தேதி ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் சங்கீதா அனுமதிக்கப்பட்டு 27 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது இந்நிலையில் ரத்தப்போக்கு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடும்ப கட்டுப்பாடு செய்து கர்ப்பப்பையையும் அகற்றியுள்ளனர் தொடர்ந்து ரத்தப்போக்கு நிற்காத நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார் இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையால் தான் சங்கீதா உயிரிழந்ததாக குற்றம் சாட்டி ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் சங்கீதாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் ரமணா படபாணியில் மருத்துவம் பார்த்த மருத்துவரை கைது செய்ய வேண்டும் எனவும், உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் ராஜா தலைமையிலான சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைய மனமின்றி இரவு 1 மணி வரை காத்திருந்து பின்னர் வீடு திரும்பினர்.. இதனால் ஜெயங்கொண்டம் மருத்துவமனை முன்பு பரபரப்பான சூழல் காணப்பட்டது. சங்கீதாவின் உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாயின்றி தவித்து வரும் இரண்டு குழந்தைகளின் பரிதாப நிலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.