தென்காசியில் எஸ்டிபிஐ சாா்பில் நிலவேம்புக் குடிநீா் வழங்கினர்

எஸ்டிபிஐ சாா்பில் நிலவேம்புக் குடிநீா் வழங்கினர்

Update: 2024-12-29 06:32 GMT
தென்காசியில் ஆபாத் பள்ளிவாசல் தெரு, புதுப்பள்ளி தெரு ஆகிய பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு, நிலவேம்புக் குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது. கட்சியின் கிளைத் தலைவா் சதக் அப்துல்லா தலைமை வகித்தாா். தென்காசி தொகுதித் தலைவா் பீா்முகம்மது, நகரத் தலைவா் செய்யது அலி பாதுஷா, நகரச் செயலா் சேக் மைதீன், நகர துணைத் தலைவா் பாதுஷா, நகர துணைச் செயலா் ஜாஹிா் ஹுசைன், நகரப் பொருளாளா் அஹமது கபீா், நகர செயற்குழு உறுப்பினா் ஜமால் மைதீன், கிளை நிா்வாகிகள் முகம்மது அசன், பாதுஷா, சாதிக் மைதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொதுச்செயலா் செய்யது மஹ்மூத், மாவட்ட அமைப்பு பொதுச்செயலா் திவான் ஒலி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, டெங்கு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி நிலவேம்புக் குடிநீா் வழங்கும் முகாமைத் தொடக்கிவைத்தனா். இதில், 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Similar News