ஆம்பூரில் மணல் கொள்ளை!

ஆம்பூர் பாலாற்றில் இரவு நேரத்தில் மணல் கொள்ளை! தடுக்குமா? மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

Update: 2024-12-29 07:41 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பாலாற்றில் இரவு நேரத்தில் மணல் கொள்ளை! தடுக்குமா? மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் எதிர்பார்ப்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாற்றில் தொடர்ந்து இரவு நேரங்களில் மாட்டுவண்டி மற்றும் டிராக்டர்களில் அதிகளவிலான மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இது குறித்து பலமுறை வட்டாட்சியர் மற்றும் காவல்துறையிடம் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது..

Similar News