ஜெயங்கொண்டம் -பொன்னேரியில் சடலம் மிதப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் தேடுதல் பணி

ஜெயங்கொண்டம் -பொன்னேரியில் சடலம் மிதப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்ஆனால் சடலம் கிடைக்காத நிலையில் ஆட்டின் பணிக்குடம் கிடைத்ததால் போலீசார் நிம்மதி அடைந்தனர்

Update: 2024-12-29 07:59 GMT
அரியலூர், டிச.29- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி என்கின்ற சோழகங்கம் பாசன ஏரியாகும். இந்த ஏரியில் தென்புற கரையில் ஆமணக்கணந்தோண்டி ஜெ.ஜெ நகர் பகுதியை சேர்ந்த சிலர் மீன் பிடித்துள்ளனர். அப்பொழுது ஏரியில் சடலம் போன்று பொருள் மிதப்பதை பார்த்த மீன் வலையை வீசிய நபர் பயந்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தலைவலி பேரில் ஜெயங்கொண்டம் மற்றும் மீன்சுருட்டி போலீசார் பொன்னேரியில் குவிந்தனர். இதையடுத்து போலீசார் அப்பகுதி பொதுமக்கள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். எனினும் நீண்ட நேர தேடுதல் பணியில் எந்த ஒரு சடலமும் கிடைக்கவில்லை ஆனால் ஆடு கன்று ஈன்ற பொழுது வெளியேற்றப்படும் ஆட்டின் பணிக்குடம் மட்டும் மிதந்து வந்ததை மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர் இந்த பணிக்குடமானது ஆடு குட்டி ஈன்றவுடன் பணிக்குடத்தை ஆலமரம் போன்ற பால் வடியும் மரங்களில் கட்டுவது வழக்கம் அவ்வாறான பணிக்குடத்தை அப்பகுதியை சேர்ந்தவர் பொன்னேரியில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது இந்நிலையில் சடலம் எதுவும் கிடைக்காததால் ஜெயங்கொண்டம் மற்றும் மீன்சுருட்டி போலீசார் நிம்மதி அடைந்தனர்.

Similar News