பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை செய்யும் பணி மும்முரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தீவிரமடைந்துள்ளது

Update: 2024-12-29 09:45 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சின்ன ஆண்டித்தாங்கல், களியாம்பூண்டி, வேடபாளையம் ஆகிய பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், பொங்கல், கார்த்திகை தீபம் உள்ளிட்ட பண்டிகை நாட்களுக்குபானை, செட்டி, அடுப்பு, அகல்விளக்கு உள்ளிட்டவைகளை செய்து, விற்பனை செய்து வருகின்றனர். அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், மண்பாண்ட தொழிலாளர்கள், பானை செய்யும் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து மண்பானை சட்டி, அடுப்பு ஆகியவற்றையும் செய்து, சிவப்பு சாயம் பூசிவெயிலில் உலர்த்திவருகின்றனர். கடந்தாண்டு, மண்பானை 50 ரூபாய்க்கும், மண்பானை சட்டி 60 ரூபாய்க்கும், அடுப்பு 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. தற்போது, களிமண் மற்றும் மரக்கட்டைகள் விலையும் கடுமையாகஉயர்ந்துள்ளது. இதனால், பானை 60 - 80 ரூபாய்க்கும், மண்பானை சட்டி 70 - 90 ரூபாய்க்கும், அடுப்பு 110 - 130 ரூபாய்க்கும் விற்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: மண்பாண்டங்கள் செய்ய தேவையான களிமண் மற்றும் அதை சுட பயன்படுத்தப்படும் தேங்காய் மட்டை விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மானிய கடன் வசதி மற்றும் வரிச்சலுகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News