மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில்.
சேதமடைந்துள்ள சாலையை சீரமைத்து தரக் கோரி சி.பி.எம் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி பகுதியில் ஈ.சி.ஆர் .சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் தினம்தோறும் இப்பகுதி வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் இந்நிலையில் சாலையை சீரமைத்து தர கோரி நெடுஞ்சாலை துறைக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் இது வரையிலும் சாலையை சீரமைக்காததை கண்டித்து திடீரென இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பாண்டி ரயில்வே கேட் அருகில் சேதமடைந்துள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் விழுந்தது போன்று ஒருவரை படுக்க வைத்து குழியில் மாலை அணிவித்தும் சாலையை சீரமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் முழக்கங்களை எழுப்பி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.